இடுகைகள்

சிறந்த செல்வங்கள்

படம்
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார் திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு.       பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

செந்நெல்

படம்
செந்நெல் தற்காலத்தில் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசி வழங்க அரிசியோடு மலரிட்டு தூவும் வழக்கம் உள்ளது. ஆனால் சங்க காலத்தில் மங்கல நாண் அணிந்த  மகளிர் நால்வர் கூடி தலைவன்  தலைவியின் தலையில் நெல்லையும், மலர்களையும் நீரொடு தூவி வாழ்த்தினர். இதனை    “நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி   பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க” என்று அகநானூறு (86) பாடல் உணர்த்துகிறது. தற்போது அரிசி தூவி ஆசி வழங்கக் காரணம் வறட்சி அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நெல் கிடைக்காத போது அரிசியில் மஞ்சள் பூசி நெல் போன்ற தூவ தொடங்கியிருக்க வேண்டும் பின்னர் அதனையே தொடர்ந்து அரிசியால் ஆசி வழங்கும் வழக்கம் உருவாகியிருக்க வேண்டும். இந்த அகநானூறு பாடல் மட்டுமல்ல வேறு எந்த சங்க இலக்கியப் பாடலிலும் நானறிந்தவரை அரிசி தூவி ஆசி வழங்கியதாக குறிப்புகள் இல்லை..         முனைவர் ஆ.பூபாலன்

நெருஞ்சி

படம்
நெருஞ்சி அள்ளூர் நன்முல்லையார் பாடிய குறுந்தொகை பாடல் நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் காதலர் இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.                                                   - குறுந்தொகை:202 தோழி! என் நெஞ்சு வருந்துகிறது முல்லை நிலத்தில்  அடர்த்தியாக முளைத்த சிறிய இலைகளை உடைய‌ நெருஞ்சி செடி முதலில்  பசுமையாக கண்ணுக்கு இனிமையாக  தோன்றிப் பின்னர் இனிய புதிய மலர்  இன்னாமையைத்தரும் குத்துகின்ற முள்ளைத் தந்தாற்போல முன்பு நமக்கு இனியவற்றைச் செய்த நம் தலைவர் இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்வதால் என் நெஞ்சு நோகிறது!.                          முனைவர் ஆ.பூபாலன்

நீரும் நிலனும்

படம்
நீரும் நிலனும் குடபுலவியனார் என்னும் புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே பாண்டிய மன்னனைப் பார்த்து உனக்கு நீடித்த புகழ் வேண்டுமெனில் மழைநீரை தேக்கச் செய் என்று அறிவுறுத்திப் பாடியுள்ளார்.. ஆனால் இதை இன்று‌ எந்த ஆட்சியாளரும்‌ பின்பற்றவில்லை.. கீழ்காணும் படத்தில் உள்ள குரங்குகளின் நிலை‌ நமக்கும் வரலாம்.... முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்  பரந்துபட்ட வியன்ஞாலம்  தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ  ஒருதா மாகிய வுரவோ ரும்பல்  ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய  பெருமைத் தாகநின் னாயு டானே  நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்  பூக்கதூஉ மினவாளை  நுண்ணாரற் பருவராற்  குரூஉக்கெடிற்ற குண்டகழி  வானுட்கும் வடிநீண்மதில்  மல்லன்மூதூர் வயவேந்தே  செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்  ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி  ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த  நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்  தகுதி கேளினி மிகுதி யாள  நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்  உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே  உண்டி முதற்றே யுணவின் பிண்டம்  உணவெனப...

வாய்க்கால் போன்ற நட்பு அவசியம்

படம்
வாய்க்கால் போன்ற நட்பு தமிழிலக்கியங்கள் நட்பு மற்றும் உழவைப்பற்றி மிகுதியாகப் பேசுகிறது.  நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசாட்சியோடு ஒப்பிட்டு வயல் வரப்பு மற்றும் வாய்க்காலும் பேசப்படுகிறது. இதனை சற்று வித்தியாசமாக நாலடியார் கூறியுள்ளது. நான் இன்று காலையில் வாய்க்காலை சீர் செய்தபோது இந்த பாடல் நினைவிற்கு வந்தது.. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  நாலடியார் -218 நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவர் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும்).

மூதுரை

படம்
மூதுரை  இஃது ஔவையாரின் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.                                மூதுரை: 2 நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.

பொன்னும் மிளகும் - முனைவர் ஆ.பூபாலன்

படம்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் கூறுவதாக எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்ற புலவர் பாடிய சங்க இலக்கிய அகநானூற்றுப்‌ பாடல்.. சங்க காலத்தில் தமிழகத்தில் விளைந்த மிளகிற்கு உலக அரங்கில் மிகுந்த வரவேற்பு இருந்ததற்கு சான்றுகளாக சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதியாக உள்ளது. அதற்கு சான்றாக மிளகிற்கு  ஈடாக பொன் கொடுத்த யவனர்கள்.. சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் அத்த நீள் இடைப் போகி, நன்றும்  அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, யவனர் தந்த வினை மாண் நன் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,     ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி ம...