புத்தாண்டு
இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாட்காட்டியின் ஆயுள் நானூற்றிச் சொச்சம் ஆண்டுகள்தான். இதன் பெயர் கிரிகோரியன் காலண்டர், அதை உருவாக்கக் காரணமாக இருந்தவர் போப் கிரிகோரி. அதற்கு முன்னர் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் உருவாக்கிய காலண்டரே பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அது கி.மு. 45இல் வெளியிடப்பட்டது. இரண்டு காலண்டர்களிலும் ஆண்டு அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. ஜூலியன் காலண்டர் கச்சிதமாக இல்லாமல் இருந்தாலும், நீண்ட காலம் பிரபலமாக இருந்தது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்பல நாடுகளில் ஏப்ரல் 1 இல் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரிகோரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக்கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண...