சங்க இலக்கியத்தில் உடும்பு
சங்க இலக்கியத்தில் உடும்பு அவள் என் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருக்கிறாள். இனியுமா வருந்தவேண்டும்? – போர் முடிந்து மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். என் பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவள் துன்புறும் ஊர் முல்லை பூத்துக்கிடக்கும் நிலம். அது மேட்டாங்காடு. வேட்டுவன் வாழும் ஊர். இறைச்சி பற்றி சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் உள்ளன. அதில் உடும்பு பற்றியும் மிகுதியான பாடல்கள் உள்ளன. இதில் ஒன்று உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவின் பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. ...