இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லூர் நத்தத்தனார்

படம்
நல்லூர் நத்தத்தனார்  இரண்டு ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கூறும் தூண்.. சென்னையிலிருந்துப் புதுவைக்கு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும்பொழுது 107வது கிலோமீட்டரில் நல்லூர் எனும் ஊர் உள்ளது.. இந்த ஊரில் வாழ்ந்தவர் சங்க இலக்கிய சிறுபாணாற்றுப்படை என்னும் பாடலை இயற்றிய நல்லூர் நத்தத்தனார் ஆவார்.. இந்த ஊர் இருந்த பகுதி இடைக்கழி நாடு ஆகும்.. இப்புலவருக்கு 1958ஆம் ஆண்டு முதலமைச்சர் பக்தவச்சலம் மற்றும் சென்னை துணை மேயர் பார்த்தசாரதி ஆகியோர் சிலை நிறுவி உள்ளனர்.. பின்னாளில் முனைவர் ஔவை நடராசன் ஐயா அவர்கள் தலைமையில் நினைவுத் தூண் அமைத்துள்ளார்கள்.. இன்று மரக்காணத்திலிருந்து செய்யூருக்கு பயணித்தபோது.. நத்தத்தனார் பற்றி கூறியபோது அவர் படைத்த சிறுபாணாற்றுப்படைப் பற்றியும் கூறவேண்டும் அல்லவா? மிகச் சிறந்த உவமைகளை கூறும் பாடல். இப்பாடலில் வரும் பாணனின் வறுமையைப் படிக்கும் போதே நமக்கு நெஞ்சம் கனக்கிறது.. அத்தகைய பாணனுக்கு மற்றொரு பாணன் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.. அதாவது, பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை சிறுபாணாற்றுப்படை விவரிக்கிறது. கண்விழி...