நட்பு
நட்பு நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. நட்புப் பற்றி பேசாத இலக்கியங்களே இல்லை எனலாம். இதில் திருக்குறளும் நாலடியாரும் முக்கிய இடம் வகிக்கிறது. நட்புக்கு இலக்கணம் கூறும் இலக்கியங்களாக இவ்விரண்டும் திகழ்கிறது. அந்த வகையில் நாலடியாரில் இருந்து ஒரு பாடல்.. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும் மதுரம் இலாளர் தொடர்பு. நாலடியார் - 211 நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போன்று. எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போன்ற தன்மையுடையதாகும். கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக...