புத்தாண்டு


இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாட்காட்டியின் ஆயுள் நானூற்றிச் சொச்சம் ஆண்டுகள்தான். இதன் பெயர் கிரிகோரியன் காலண்டர், அதை உருவாக்கக் காரணமாக இருந்தவர் போப் கிரிகோரி.

அதற்கு முன்னர் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் உருவாக்கிய காலண்டரே பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அது கி.மு. 45இல் வெளியிடப்பட்டது. இரண்டு காலண்டர்களிலும் ஆண்டு அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. ஜூலியன் காலண்டர் கச்சிதமாக இல்லாமல் இருந்தாலும், நீண்ட காலம் பிரபலமாக இருந்தது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்பல நாடுகளில் ஏப்ரல் 1 இல் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரிகோரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக்கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வேபோன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முதல் நாள்  முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று பின்னர் புத்தாண்டை ஏப்ரலில் கொண்டாடுவது இல்லாமல் போயிற்று.
சித்திரை புத்தாண்டுப் ஏப்ரல் 14ல் தான் வரும் ஆதலால் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்றே. திராவிட மொழிகள் பலவற்றின் புத்தாண்டையும் உற்று நோக்கினால் தெரியும் புத்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது என்று.
எல்லாம் ஏப்ரல் மாதத்தில் தான் கொண்டாடுகின்றனர். சிலர் சித்திரை ஒன்று வடமொழிப் பண்பாடு ஆதலால் தை ஒன்று தான் புத்தாண்டு என்கின்றனர். அவர்கள் கூற்றுப்படியேப் பார்த்தாலும் சித்திரை மாதம் வடமொழி மாதம் என்றால் அதன் வரிசையில் வரும் தை மாதமும் வடமொழி தானே..
புத்தாண்டை மாற்றுவது, வரலாற்று மரபைத் திரிப்பது புதிதல்ல இது பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
சித்திரைக்கும் தமிழ்ச் சித்தர்களுக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும்.
பாராண்ட தமிழர்களின் புத்தாண்டு சித்திரை மாதமே.

            முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு

நல்லூர் நத்தத்தனார்