நெருஞ்சி

நெருஞ்சி

அள்ளூர் நன்முல்லையார் பாடிய குறுந்தொகை பாடல்

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே. 
                        
                        - குறுந்தொகை:202

தோழி! என் நெஞ்சு வருந்துகிறது முல்லை நிலத்தில்  அடர்த்தியாக முளைத்த சிறிய இலைகளை உடைய‌ நெருஞ்சி செடி முதலில்  பசுமையாக கண்ணுக்கு இனிமையாக  தோன்றிப் பின்னர் இனிய புதிய மலர்  இன்னாமையைத்தரும் குத்துகின்ற முள்ளைத் தந்தாற்போல முன்பு நமக்கு இனியவற்றைச் செய்த நம் தலைவர் இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்வதால் என் நெஞ்சு நோகிறது!.

                         முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு

நல்லூர் நத்தத்தனார்