செந்நெல்

செந்நெல்


தற்காலத்தில் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசி வழங்க அரிசியோடு மலரிட்டு தூவும் வழக்கம் உள்ளது. ஆனால் சங்க காலத்தில் மங்கல நாண் அணிந்த  மகளிர் நால்வர் கூடி தலைவன்  தலைவியின் தலையில் நெல்லையும், மலர்களையும் நீரொடு தூவி வாழ்த்தினர். இதனை

   “நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
  பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க”

என்று அகநானூறு (86) பாடல் உணர்த்துகிறது.

தற்போது அரிசி தூவி ஆசி வழங்கக் காரணம் வறட்சி அல்லது ஏதோ ஒரு காரணத்தால் நெல் கிடைக்காத போது அரிசியில் மஞ்சள் பூசி நெல் போன்ற தூவ தொடங்கியிருக்க வேண்டும் பின்னர் அதனையே தொடர்ந்து அரிசியால் ஆசி வழங்கும் வழக்கம் உருவாகியிருக்க வேண்டும்.
இந்த அகநானூறு பாடல் மட்டுமல்ல வேறு எந்த சங்க இலக்கியப் பாடலிலும் நானறிந்தவரை அரிசி தூவி ஆசி வழங்கியதாக குறிப்புகள் இல்லை..

       முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு

நல்லூர் நத்தத்தனார்