வாய்க்கால் போன்ற நட்பு அவசியம்
வாய்க்கால் போன்ற நட்பு
தமிழிலக்கியங்கள் நட்பு மற்றும் உழவைப்பற்றி மிகுதியாகப் பேசுகிறது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசாட்சியோடு ஒப்பிட்டு வயல் வரப்பு மற்றும் வாய்க்காலும் பேசப்படுகிறது.
இதனை சற்று வித்தியாசமாக நாலடியார் கூறியுள்ளது.
நான் இன்று காலையில் வாய்க்காலை சீர் செய்தபோது இந்த பாடல் நினைவிற்கு வந்தது..
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
நாலடியார் -218
நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவர் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும்).
கருத்துகள்
கருத்துரையிடுக