மூதுரை
மூதுரை
இஃது ஔவையாரின் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
மூதுரை: 2
நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல்
எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும்
வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது
இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக