உன்னதமான காதலர்கள்

உன்னதமான காதலர்கள்

தலைவன் தன் காதலியை பகற்பொழுதில் ஒரு புன்னைமரத்தின் அடியில் சந்திக்கிறான். அவளைத் தொட நினைக்கிறான். அப்போது அவள் மரத்தைக் காட்டி இது நாங்கள் சிறு குழந்தையில் விளையாடிய பொழுது மறந்து போட்டு விட்ட விதையிலிருந்து முளைத்தது. பிறகு நாங்கள் அதற்கு பாலும் தேனும் ஊற்றி வளர்த்தோம்.
அப்போது எங்கள் தாய், 'உங்களை விட உங்கள் தங்கையான புன்னை மிக நல்லவள். அவள் எதற்கும் அடம் பிடிக்க மாட்டாள்' எனப் பாராட்டினாள். எனவே, என் உடன்பிறப்பான இப்புன்னை நிழலில் உங்களுடன் பேச வெட்கமாக இருக்கிறது. இங்கு வேறு இடங்களும் இருக்கின்றன. நாம் அங்கே போய்ப் பேசிக் கொண்டிருப்போம் என்றாள்.

மனிதநேய மிக்க இந்த அன்புக்காதலை,

'விளையாடு ஆயமொடு வெண்மணல்
அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகு
மென்று
அன்னை கூறினள் புன்னையது
சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு
நகையே'

இவ்வாறு நற்றிணை 172 வது பாடல் கூறுகிறது..

                 முனைவர் ஆ.பூபாலன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீரும் நிலனும்

சங்க இலக்கியத்தில் உடும்பு

நல்லூர் நத்தத்தனார்