நற்றிணையில் நகை
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்
பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
(நற்றிணை 35)
ஒரு நாவல் பழம் கீழே விழுந்திருந்தது அதைப் பறக்கும் வண்டுகள் தம் இனத்தைச் சேர்ந்தவை என்று எண்ணி அதைச் சூழ்ந்து நின்றன. அந்தப் பக்கமாக வந்த நண்டு இவை எல்லாம் பழங்கள் என்று நினைத்து உண்ண அவற்றைக் கவ்வின. உடனே வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு பறந்தன. அந்தப் பக்கம் பறந்து வந்த நாரை இதைப் பார்த்து, பெரிய சண்டை சச்சரவு போல இருக்கிறது, நாம் போய் சமரசம் செய்து வைக்கலாம் என்று போய் சமரசம் செய்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக